News August 4, 2024

OLYMPICS: பதக்கப்பட்டியலில் அமெரிக்கா மீண்டும் 2ம் இடம்

image

ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 9
தங்கப்பதக்கங்களுடன் நேற்று 4வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இன்று மேலும் 5 தங்கப்பதக்கங்களை வென்று, மொத்தம் 14 தங்கப்பதக்கங்களுடன் 2ஆம் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளது. சீனா 16
தங்கப்பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ், ஆஸ்திரேலியா (12 தங்கம்) 3 மற்றும் 4ஆவது இடத்தில் உள்ளன. இந்தியா 3 வெண்கலத்துடன் 54ஆவது இடத்தில் உள்ளது.

Similar News

News December 9, 2025

புத்தர் பொன்மொழிகள்

image

*நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன, அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு. *நீங்கள் ஒரு பூவில் விருப்பப்பட்டால் அதைப் பறித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பூவில் அன்பு வைத்தால் தினமும் அதற்குத் தண்ணீர் ஊற்றுவீர்கள். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.

News December 9, 2025

கொரோனா பற்றி கூறியவரை பழிவாங்க துடிக்கும் சீனா

image

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா பரவியதாக உலகிற்கு சொன்னதால், தன்னை பழிவாங்க சீனா முயற்சிப்பதாக, வைரலாஜிஸ்ட் லி-மியாங் யான் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக, சீனாவில் உள்ள தனது பெற்றோர், கணவரை பிடித்து வைத்துக் கொண்டு, தன்னை நாடு திரும்ப சொல்லி அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து உலகிற்கு சொன்னதும், யான் US-ல் தஞ்சம் புகுந்தார்.

News December 9, 2025

கோல்டன் குளோப்ஸ் ஃபீவர் ஸ்டார்ட் ஆனது!

image

2026 கோல்டன் குளோப்ஸ் பரிந்துரை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், சிறந்த இயக்குநர், நடிகர் என 9 பிரிவுகளில் டிகாப்ரியோவின் ‘One Battle After Another’ பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நார்வே படமான ‘Sentimental Value’ 8, ஹாலிவுட் படமான ‘Sinners’ 7 பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11-ம் தேதி, ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் இந்த சர்வதேச விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

error: Content is protected !!