News July 28, 2024

Olympics: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரமிதா

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் முன்னேறியுள்ளார். மகளிருக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவின் தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடிய அவர் 631.5 புள்ளிகளைப் பெற்று 5ஆம் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.
43 வீராங்கனைகள் பங்குகொண்ட இந்த ஆட்டத்தில் முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

Similar News

News March 4, 2026

₹1,88,70,00,00,00,000 ஒரு மாதத்துக்கு செலவா?

image

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடங்கிய முதல் 24 மணி நேரத்தில் மட்டுமே அமெரிக்கா சுமார் ₹6,900 கோடியை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் ஒரு மாதத்திற்கு தொடரலாம் என டிரம்ப் எதிர்பார்ப்பதால், மொத்த செலவு ₹18.87 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ‘USS Gerald R Ford’ என்ற விமானம் தாங்கிக் கப்பலின் பராமரிப்புக்கு மட்டும் ஒரு நாளைக்கு ₹58 கோடி செலவாகிறதாம்.

News March 4, 2026

ஓம் சக்தி, பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி: விஜய்

image

தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக என தஞ்சை கூட்டத்தில் விஜய் பேசியுள்ளார். இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என அனைத்து அணிகளையும் தவெக அடித்து நொறுக்கும் என்ற அவர், தனக்கும் மக்களுக்கும் இருப்பது எலெக்‌ஷனால் ஏற்பட்ட பந்தம் அல்ல, இது எமோஷனால் ஏற்பட்ட பந்தம் என்றார் . மேலும், ஓம் சக்தி, பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

தங்கம், வெள்ளி விலை.. ₹20,000 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை <<19293862>>சவரனுக்கு <<>>₹2,120 குறைந்த நிலையில், வெள்ளி விலையும் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ₹20 குறைந்து ₹295-க்கும், கிலோ வெள்ளி ₹20,000 குறைந்து ₹2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கடந்த 3 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹30,000 குறைந்துள்ளது.

error: Content is protected !!