News August 7, 2024
Olympics: வெள்ளிப் பதக்கம் யாருக்கும் இல்லை

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதிக எடைக் காரணமாக ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மற்றொரு மல்யுத்த வீராங்கனை சாராவுக்கு (அமெரிக்கா) தங்கப் பதக்கம் வழங்கப்படும். மூன்றாவது இடம் பெறும் மல்யுத்த வீராங்கனைக்கு வெண்கலம் வழங்கப்படும். இறுதிப் போட்டி நடைபெறாத காரணத்தால், இரண்டாவது இடத்துக்கான வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது.
Similar News
News January 30, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது pmjay.<
News January 30, 2026
ஊடகம் மூலம் நாடகமாடும் OPS: செல்லூர் ராஜு

அதிமுகவில்<<18992830>> OPS-ஐ இணைக்க சாத்தியமில்லை<<>> என்று EPS கூறியது பழைய செய்தி என தேனியில் செய்தியாளர்களை சந்தித்த OPS சற்றுமுன் கூறினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள செல்லூர் ராஜு, OPS ஊடகம் மூலம் நாடகமாடுவதாக சாடியுள்ளார். மேலும், அதிமுகவில் இணைய வேண்டும் என்றால் கேட்க வேண்டிய இடம் வேறு ஆனால், OPS அதை செய்யாமல் ஏன் இப்படி அனைவரையும் குழப்பத்திற்கு ஆளாக்குகிறார் என்றார்.
News January 30, 2026
தங்கம் விலை மேலும் குறைகிறது

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை திடீரென சரிய தொடங்கியுள்ளது. இதற்கான காரணம், சர்வதேச சந்தையில் நேற்று 1 அவுன்ஸ் $5,608 ஆக இருந்த தங்கம் சற்றுமுன் $5,173 ஆக சரிந்துள்ளது. இதன் எதிரொலியாகவே இன்றைய தினம் <<18999179>>சவரனுக்கு ₹4,840 குறைந்துள்ளது<<>>. USA மத்திய வங்கி 3.5%-3.75% என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதால், டாலர் பணவீக்க பதற்றம் சற்று தணிந்துள்ளது. இதனால், வரும் நாள்களில் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாம்.


