News August 3, 2024
Olympics பதக்கப்பட்டியல்: பிரான்ஸ் மீண்டும் 2ம் இடம்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் பிரான்ஸ் மீண்டும் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 13 தங்கத்துடன் சீனா முதலிடத்தில் நீடிக்கிறது. நேற்று 2ம் இடத்தில் இருந்த அமெரிக்கா (9 தங்கம் ) இன்று நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸ் 2ம் இடத்திற்கும் (11 தங்கம் ), ஆஸ்திரேலியா 3ம் இடத்திற்கும் (11 தங்கம் ) முன்னேறியுள்ளன. இந்தியா 3 வெண்கலப்பதக்கங்களுடன் பட்டியலில் 48வது இடத்தில் உள்ளது.
Similar News
News October 21, 2025
வரலாற்றில் இன்று

*1895 – ஜப்பானிய படைகளின் முற்றுகையால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
*1937 – நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்ததினம்.
*1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
*1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*1987 -யாழ்ப்பாண ஹாஸ்பிடல் படுகொலையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
News October 21, 2025
இது இருந்த பாம்பு வீட்டை அண்டாது!

மழைக்காலம் வந்தால் வீடுகளில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் வரவு அதிகரிக்கும். இதை தடுக்க உங்கள் வீட்டில் காட்டு துளசி செடி இருந்தால் போதும். துளசி போலவே காட்சி அளிக்கும் இந்த செடியில் இருந்து வரும் நறுமணம் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும். காட்டு துளசியின் இலை, வேரை யாராவது எடுத்துச் சென்றால், பாம்பு அவர்கள் முன் வந்தால் கூட, நெருங்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.
News October 21, 2025
முகமது அலியின் பொன்மொழிகள்

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். * என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பது என் குறிக்கோள்களே.