News August 2, 2024
Olympics: இந்திய ஹாக்கி அணி வரலாற்று வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில், இந்திய அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற குரூப் போட்டியில், ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1972ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி தனது வெற்றியை பெற்றுள்ளது.
Similar News
News January 20, 2026
Sports 360°: பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா

*SAFF ஃபுட்ஸல் சாம்பியன்ஷிப்பில், இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது *ஆசிய மகளிர் ரைஸிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் பிப்.22-ல் தாய்லாந்தில் தொடங்குகிறது *சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி போட்டியில் பஞ்சாப் அணிக்காக சுப்மன் கில் விளையாடுவார் என தகவல் *T20 உலகக் கோப்பை தொடரின், முதல் சில போட்டிகளில் பேட் கம்மின்ஸ் விளையாடமாட்டார் என அறிவிப்பு
News January 20, 2026
ஐநாவுக்கு செக் வைக்க முயலும் டிரம்ப்

ஐ.நா. சபைக்கு மாற்றாக ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்ளார். இந்த அமைப்புக்கு டிரம்ப் தலைமையேற்றுள்ள நிலையில், இதில் ₹9000 கோடி கட்டணம் செலுத்தி மற்ற நாடுகள் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத உறுப்பினர்கள் மூன்று ஆண்டுகள் வரை அந்த அமைப்பில் இருக்கலாம் எனவும் அமெரிக்கா விளக்கியுள்ளது.
News January 20, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 586 ▶குறள்: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. ▶பொருள்: ஆராய்ந்திட வந்த நிகழ்வில் தொடர்பற்றவரைப் போலக் காட்டிக்கொண்டு, அதனைத் தீர ஆராய்ந்து, அதில் எத்துணைத் துன்பம் வரினும் தாங்கிக் கொண்டு, தம்மை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாதவரே சிறந்த ஒற்றர்.


