News July 28, 2024
OLYMPICS DAY 2: ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் பேட்மிண்டன், ரோயிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், குத்துச்சண்டை, டென்னிஸ் & வில்வித்தை ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பேட்மிண்டனில் PV சிந்துவும், குத்துச்சண்டையில் நிகாத் ஜரீனும் களமிறங்க உள்ளனர். 10 மீ., துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் மனு பாகரும், வில்வித்தை மகளிர் அணியும் சிறப்பாக செயல்பட்டால் தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது.
Similar News
News March 3, 2026
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு பல்வேறு வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மனித உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ணி, உற்சாகமாக உழைக்க, 6 வகையான ரெஸ்ட்களை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை என்னென்ன என அறிய, போட்டோவை Swipe பண்ணுங்க. உங்களுக்கு எந்த விதமான ரெஸ்ட் தேவைப்படுது?
News March 3, 2026
தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

தமிழக தேர்தல் தேதியை ஒட்டுமொத்த வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கப்படலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் CEC அடங்கிய குழு, 9, 10-ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். எனவே, அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனராம்.
News March 3, 2026
சாதி மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா? அதிமுக

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கால், நாங்குநேரியில் கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா எனவும் அவர் சாடியிருக்கிறார்.


