News August 6, 2024

Olympics Day 12: ஆல் தி பெஸ்ட் டீம் இந்தியா!

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இன்று நடைபெறும் டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், பேட்மிண்டன், ஈட்டி எறிதல், 400 மீட்டர் ஓட்டம், ஹாக்கி ஆகிய 5 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெறும் மல்யுத்தத்தில் (காலிறுதிக்கு முந்தைய சுற்று) வினேஷ் போகத் ஜப்பானின் சுசாகி யூயுடன் மோதவுள்ளார். மாலை 3.20 மணிக்கு நடைபெற உள்ள ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் நீரஜ் சோப்ரா களமிறங்கவுள்ளார்.

Similar News

News April 1, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹3,040 உயர்வு!

image

மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹380 உயர்ந்து ₹14,050-க்கும், சவரனுக்கு ₹3,040 அதிகரித்து ₹1,12,400-க்கும் விற்பனையாகிறது. <<19529289>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை 2% உயர்ந்துள்ளதன் எதிரொலியாக நம்மூர் சந்தையிலும் தடாலடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT.

News April 1, 2026

ஒரே ஓவரில் 11 பந்துகள்.. மோசமான ரெக்கார்டு!

image

IPL-ல் ஒரு ஓவரில் அதிக பந்துவீசிய பவுலர் என்ற மோசமான ரெக்கார்டை அர்ஷ்தீப் சிங் சமன் செய்துள்ளார். GT-க்கு எதிரான மேட்ச்சில் 4 வைட், 1 நோ பால் உள்பட அவர் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசினார். ஏற்கெனவே, RCB சிராஜ் (vs MI, 2023) CSK துஷார் தேஷ்பாண்டே(vs LSG, 2023), LSG ஷர்துல் தாக்கூர் (vs KKR, 2025), RR சந்தீப் சர்மா (vs DC, 2025), MI ஹர்திக் (vs GT, 2025) ஆகியோரும் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர்.

News April 1, 2026

₹200 வரை உயர்ந்த சுங்கக் கட்டணம்

image

தமிழகத்திலுள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, 3% – 5% வரை கட்டணம் உயர்ந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கார், ஜீப்களுக்கான சுங்கக் கட்டணம் ₹10 வரையிலும், பஸ்கள் & கனரக வாகனங்களுக்கான கட்டணம் ₹40 – ₹200 வரையிலும் உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!