News August 8, 2024

Olympics: தகுதி நீக்கத்தில் சதி? வினேஷ் போகத் மாமனார்

image

வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் சதி இருக்கலாம் என அவரது மாமனார் ராஜ்பால் ரதி சந்தேகம் எழுப்பியுள்ளார். தனது 100 சதவீத உழைப்பையும் வினேஷ் போகத் கொடுத்ததாகக் கூறிய அவர், இதில் மறைந்திருக்கும் உண்மைகளை கண்டறிய, ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு பிரதமர் அழுத்தம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். வெள்ளிப் பதக்கம் பெறுவது வினேஷின் உரிமை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 13, 2025

இன்சூரன்ஸில் 100% அந்நிய முதலீடு: மக்களுக்கான பயன்?

image

இன்சூரன்ஸ் துறையில், அந்நிய நேரடி முதலீட்டை 74% to 100%ஆக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக திங்களன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பால், சர்வதேச நிறுவனங்கள் முழுமையாக இந்தியாவில் கால்பதிக்கும். இதனால், மக்களுக்கு சர்வதேச தரத்திலான சேவை கிடைப்பதோடு, காப்பீட்டுக்கான பிரீமியம் விலையும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

News December 13, 2025

காந்தி பொன்மொழிகள்

image

*கூட்டத்தில் நிற்பது எளிதானது, ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும். *பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். *நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள். *எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை. *மனிதகுலத்தின் மகத்துவம் மனிதனாக இருப்பதில் இல்லை, மனிதாபிமானமாக இருப்பதில் உள்ளது.

News December 13, 2025

தீண்டாமையை ஒழிக்க போராடிய சாவர்க்கர்: அமித்ஷா

image

நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அங்கீகாரம் கிடைக்கவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்து மதத்தில் இருந்த தீமைகளை அகற்ற அவர் போராடியதாகவும், இந்தியாவின் விடுதலை மற்றும் எதிர்காலத்தை அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருந்ததாகவும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும், அந்தமானில் சாவர்க்கர் அடைக்கப்பட்ட சிறை, தேசிய புனித தளமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!