News August 8, 2024
Olympics: ஆண்டிம் பங்கல் 3 ஆண்டுகள் விளையாட தடை

ஒலிம்பிக்ஸ் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட, இந்திய மல்யுத்த வீராங்கனை ஆண்டிம் பங்கல் 3 ஆண்டுகள் விளையாட தடை விதித்து இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. ஆண்டிம் பங்கல் தனது அடையாள அட்டையை, சகோதரியிடம் கொடுத்து அவரை ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுப்பியதால் ஒலிம்பிக் தொடரில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். 53 கிலோ எடைப் பிரிவில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 28, 2025
இனி Whatsapp-லும் Cover Photo! விரைவில் அசத்தல் அப்டேட்!

தொடர்ந்து தனது யூஸர்களை தக்கவைத்துக் கொள்ள, Whatsapp புது புது அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது. அப்படிதான் தற்போது, X & பேஸ்புக்கில் Cover photo வைப்பது போல, Whatsapp-லும் Cover photo வைக்கும் வசதி அறிமுகமாகவுள்ளது. முதற்கட்டமாக, Beta வெர்ஷனில் பிசினஸ் அக்கவுண்டகளுக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. விரைவில் இந்த வசதி, விரைவில் அனைத்து யூஸர்களுக்கும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
News October 28, 2025
உலகின் வயதான அதிபரானார் பால் பியா

கேமரூனில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்ததாக அங்கு வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில், பால் பியா 53.66% வாக்குகளையும், எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19% வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் 92 வயதில் மீண்டும் அதிபரான பால் பியா, உலகின் மிகவும் வயதான அதிபர் என்ற சாதனையையும் படைத்தார். 1984-ல் இருந்து (41 ஆண்டுகளாக) பால் பியாதான் அதிபராக உள்ளார்.
News October 28, 2025
விஜய் அரசியலுக்கே தகுதியற்றவர்: கருணாஸ்

மக்கள் பிரச்னையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கே தகுதியற்றவர்கள் என்று விஜய்யை, கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய்யை விட பெரிய கூட்டத்தை கையாண்டவர் விஜயகாந்த் என குறிப்பிட்ட கருணாஸ், சும்மா ஏதோ சப்ப கட்டு கட்டக்கூடாது என்று காட்டமாக பேசினார். கரூர் துயரை அடுத்து விஜய்யின் செயல்பாடுகள் மீதே அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.


