News August 8, 2024

ஒலிம்பிக்: அரையிறுதிக்குள் நுழைந்தார் அமன் ஷெராவத்

image

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், அல்பேனிய வீரர் அபாகரவை 12-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார். இன்றிரவு நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் இகுச்சியுடன் அவர் மோதவுள்ளார். அமன் ஷெராவத் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar News

News November 26, 2025

மலச்சிக்கல் பிரச்னை நொடியில் நீங்கும்..

image

மலச்சிக்கல் பிரச்னைக்காக விலையுயர்ந்த மருந்துகள் எடுத்தும் தீர்வு கிடைக்கலையா? ஆவாரம் பூ இதற்கு ஒரு சிறந்த நிவாரணம் என ஆயுர்வேத டாக்டர்கள் சொல்றாங்க. இரவில் தூங்குவதற்கு முன் அரை ஸ்பூன் ஆவாரம் இலை பொடி, ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு இவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். வாரத்திற்கு 2 முறை இப்படி செய்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். SHARE.

News November 26, 2025

விஜய்யை நம்பமுடியாது: செல்வப்பெருந்தகை

image

தவெக உடன் TN காங்., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை நம்பி திமுக கூட்டணியிலிருந்து காங்., வெளிவர வாய்ப்பில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். அந்த தகவல் உண்மை இல்லை என கூறிய அவர், காங்கிரஸில் இருக்கும் சிலர் சொல்வது கட்டுக்கதை என்றார். மேலும், TN-ல் திமுகவின் நம்பிக்கைக்குரிய கட்சியாக காங்., செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 26, 2025

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $9 உயர்ந்து, $4,141-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (நவ.25) மட்டும் சவரனுக்கு ₹1,600 உயர்ந்து, ₹93,760-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!