News August 4, 2024
Olympics 2024: ஹாக்கியில் இன்று IND vs ENG மோதல்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் இன்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். துப்பாக்கிச்சுடுதலில் விஜய்வீர் சித்து, அனிஷ்பகல் களமிறங்குகின்றனர். மேலும், இந்தியா-இங்கிலாந்து (ஆண்கள் காலிறுதி ஆட்டம்) ஹாக்கிப்போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டனில் லக்ஷயா சென் (இந்தியா)-விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) (ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி) நடைபெறவிருப்பது, குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 3, 2025
தேனி: மின்னொளியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்

தேனியில் இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முழுவதும் ஊதா நிற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்வோர் மற்றும் வாகனங்களில் செல்வோரும் நின்று ஆச்சரியபட்டு செல்வதை காண முடிகிறது.
News December 3, 2025
அரசு மருத்துவமனை கட்டிடம் விரைவில் திறப்பு

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 3, 2025
அர்னால்டை பின்னுக்கு தள்ளிய ஷாருக் கான்

2025 ஹுருன் பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக்கான ₹12,490 கோடி சொத்து மதிப்புடன் உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அர்னால்ட், டாம் குரூஸ் ஆகியோரையெல்லாம் பின்னுக்கு தள்ளி, கிங் கான், பாலிவுட்டில் இருந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் எந்த இடத்தில் இருக்கிறார் தெரியுமா? மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


