News August 4, 2024
Olympics: ரிங் ஜிம்னாஸ்டிக்ஸை கௌரவித்த சிறப்பு டூடுல்

பாரிஸில் நடக்கும் 33ஆவது ஒலிம்பிக்ஸ் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் 10ஆவது நாளாக கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இதில், மெட்ரோ ரயிலுக்குள் நீல நிறப் பறவையொன்று, அதன் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற குறியீடு இடம்பெற்றுள்ளது. ஆடவர்களுக்கான ரிங் ஜிம்னாஸ்டிக்ஸ் இன்று நடைபெறவுள்ளது. அதனை பிரதிபலிக்கும் வகையில் இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. <<-se>>#Olympics<<>>
Similar News
News October 22, 2025
மழைக்காலத்தில் உதவும் டிப்ஸ்!

*மழைக்காலம் ஆரம்பித்தாலே, கொசுக்களின் ஆதிக்கமும் துவங்கி விடும். இதிலிருந்து தப்பிக்க, நெருப்பில், வேப்பிலை போட்டு, புகை போடலாம்.
*ஜில்லென்று இருக்கும் துணிகளை மடித்து, கம்பளியில் சுருட்டி, நான்கு மணி நேரம் கழித்து எடுத்தால், வெயிலில் காய வைத்தது போன்று மொட மொடப்பாக இருக்கும்.
*ஆடைகளில் சேறு படிந்தால், உருளைக்கிழங்கை நறுக்கி, சேறு உள்ள இடத்தில் தேய்த்து, பின், துவைத்தால், கறை மறைந்து போகும்.
News October 22, 2025
நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமுடன் இருங்கள்!
News October 22, 2025
4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.