News August 14, 2025
ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் காலமானார்

இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வெஸ் பயஸ் (80) காலமானார். இவர், 1972 ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றவர் ஆவார். உடல்நலக் குறைவு & வயது மூப்பு காரணமாக கொல்கத்தா மருத்துவமனையில் இன்று காலை காலமானார். இவரது மறைவுக்கு முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் வீரேன் ரஷ்குயின்ஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
தூய்மை பணியாளர்களுக்கு ₹3.5 லட்சம் கடன்: தமிழக அரசு

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், CM தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு, பணியின்போது இறந்தால், குடும்பத்தினருக்கு ₹10 லட்சம், குழந்தைகளின் உயர்கல்விக்கு உதவி, தொழில் தொடங்க ₹3.5 லட்சம் கடன் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
News August 14, 2025
J&K வழக்கு: பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய SC

ஜம்மு & காஷ்மீருக்கான (J&K) சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு 2019-ல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான இன்றைய விசாரணையின்போது, 8 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு SC உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை சுட்டிக்காட்டிய கோர்ட், J&K-யின் நிலையை கவனிக்காமல் விட்டுவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
சற்றுமுன்: ‘யுத்த நாயகி’ காலமானார்..

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் லெப்டினன்ட் ஆஷா சஹாய் (97) பாட்னாவில் காலமானார். ஜப்பானில் பிறந்த இவர், நேதாஜியால் ஈர்க்கப்பட்டு, 17 வயதில் INA-வில் சேர்ந்தார். இந்திய தேசிய ராணுவத்தின் (INA) ஜான்சி ராணி படைப்பிரிவில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர். இவரது தந்தை நேதாஜிக்கு அரசியல் ஆலோசகராகவும் இருந்தார். நாளை 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடவிருக்கும் வேளையில், மகத்தான தியாகியை இந்தியா இழந்துள்ளது.