News August 15, 2024
மோடியை சந்தித்த ஒலிம்பிக் சாம்பியன்ஸ்

டெல்லியில் இன்று நடைபெற்ற சுதந்தர தின நிகழ்ச்சியில் ஒலிம்பிக் வீரர்களை பிரதமர் மோடி கெளரவித்தார். பின்னர் அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது துப்பாக்கிச் சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்ற மனு பாக்கர், தனது பிஸ்டலை பற்றி மோடியிடம் விவரித்தார். வெண்கல பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்கள், தாங்கள் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டையை மோடிக்கு பரிசாக வழங்கினர்.
Similar News
News November 22, 2025
திடீரென மனம் மாறிய டிரம்ப்!

நியூயார்க் மேயர் <<18203048>>மம்தானிக்கும்<<>>, டிரம்ப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பை அடுத்து, நியூயார்க் வளர்ச்சிக்கும் தேவையானவை செய்து தரப்படும் எனவும், மம்தானி சிறந்த மேயராக இருப்பார் எனவும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நேற்று வரை எதிரும் புதிருமாய் இருந்த இவர்கள் இப்படி இணக்கம் காட்டுவது எப்படி என மக்கள் கேட்கின்றனர்.
News November 22, 2025
பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணி துணைத் தலைவர் செல்வராசு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த சில தினங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் <<18345411>>மாற்றுக் கட்சியினர்<<>> பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.
News November 22, 2025
ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.


