News August 21, 2025
இதய நலனை பாதுகாக்கும் ஆலிவ் தேநீர்

இருதய பாதிப்புகளை ஏற்படுத்தும் LDL கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆற்றல் ஆலிவ் இலையில் உள்ள ஒலியூரோபீனுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆலிவ் இலை பொடியை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆலிவ் இலை டீ ரெடி. இந்த டீயை Low BP, நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவர்கள் ஆலோசனையின்படி பருகலாம்.
Similar News
News January 19, 2026
ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரிப்பு

இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டில் ஆட்டோமொபைல் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் 50,98,474 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்தாண்டு 63,25,211-ஐ இது 24.1% அதிகம். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வாகனங்களில் தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது. இவற்றில், மாருதி சுசுகி 3.95 லட்சம் யூனிட்களை ஏற்றுமதி செய்து முதலிடத்தில் உள்ளது.
News January 19, 2026
கிரீன்லாந்தில் டிரம்புக்கு எதிராக பேரணி

கிரீன்லாந்தை கையகப்படுத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்கு எதிராக, அந்நாட்டு மக்கள் ‘கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தினர். கிரீன்லாந்து மட்டுமின்றி டென்மார்க்கின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெறுகிறது. கிரீன்லாந்தை கைப்பற்ற நினைக்கும் டிரம்பின் முயற்சிக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
News January 19, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 19, தை 5 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


