News March 21, 2025
200 ரூபாய்க்கு பேரனை விற்ற மூதாட்டி!

முதுமையில் வறுமை வாட்டிய ஒருவரால் என்ன செய்ய முடியும்? ஒடிஷாவில் வீடற்ற மூதாட்டி மாண்ட் சோரன், தனது 7 வயது பேரனை பராமரிக்க முடியாமல் அவனை ஒரு தம்பதியிடம் விற்றுள்ளார். இதற்காக அவர் வாங்கியத் தொகை ரூ.200 மட்டுமே. பேரன் ஒரு நல்ல இடத்தில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே அந்த பாட்டியின் எண்ணம். இதனை அறிந்த போலீசார், தம்பதியிடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர்.
Similar News
News March 21, 2025
நாளை கருப்புக் கொடி போராட்டம்: பாஜக அறிவிப்பு

மாநில CMகளை ஒருங்கிணைத்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து திமுக சார்பில் சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அரசு மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபத்தை திசை திருப்பவே மறுசீரமைப்பு நாடகத்தை திமுக அரங்கேற்றி வருவதாகவும் அண்ணாமலை சாடியுள்ளார்.
News March 21, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக ஐகோர்ட் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பிஹார், தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
News March 21, 2025
பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி.. 44 பந்துகளில் சதம்..

நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாம்பியன் டிராபியில் தொடர் தோல்வி, நியூசிலாந்து தொடரின் முதல் 2 போட்டிகளில் தோல்வி என துவண்டு போயிருந்த பாகிஸ்தானுக்கு இது ஆறுதலாக அமைந்துள்ளது. முதலில் ஆடிய நியூசிலாந்து 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தானில், இளம் வீரர் ஹசன் நவாஸ் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.