News October 1, 2025
பழைய ஓய்வூதிய திட்டம் இடைக்கால அறிக்கை தாக்கல்

திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியில் ஒன்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது. இதற்காக கடந்த பிப்ரவரியில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இக்குழுவானது தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் சில ஆலோசனைகள் மேற்கொண்ட பின்னர் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுமாம். இதனால் விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 14, 2026
நடிகை த்ரிஷாவின் புதிய PHOTOS

நடிகை த்ரிஷா சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு அவர் உற்சாகமூட்டுவார். அந்த வகையில், இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் வாடாமல்லி வண்ண புடவையில் இருக்கும் புதிய போட்டோஸை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குநர் மணிரத்னத்துடன் எடுத்துக் கொண்ட போட்டோவை ஸ்டோரியாக வைத்துள்ளார். த்ரிஷாவின் பதிவுக்கு ரசிகர்கள் ❤️ விட்டு வருகின்றனர்.
News March 14, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

Toyoto நிறுவனம், சில குறிப்பிட்ட மாடல் கார்களுக்கு விலைக் குறைப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் வரை இந்த தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படும். கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். எந்த மாடல் காருக்கு என்ன விலை என்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். இடதுபுறமாக SWIPE செய்து பாருங்க.
News March 14, 2026
மக்கள் நலனை காக்குமா மத்திய அரசு? CM ஸ்டாலின்

சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள TN அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 3,228 கி.லி. மண்ணெண்ணெய், மின் அடுப்புகளை பயன்படுத்தும் உணவகங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ₹2 மானியம் வழங்கப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் நலனை காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


