News October 13, 2025

பழைய ₹2000 நோட்டுகள்: தீபாவளிக்கு அடித்த லக்!

image

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது தனது அம்மாவுக்கு, பழைய DTH பெட்டிக்குள் இருந்து ₹2000 நோட்டுகள் கிடைத்துள்ளதாக, போட்டோவுடன் ஒருவர் SM-ல் பதிவிட்டுள்ளார். அதுவும் ஒன்றிரண்டு அல்ல, ₹2 லட்சம் மதிப்புள்ள நோட்டுகள். சரியான காரணம் இருந்தால் RBI அலுவலகங்களில் ₹2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்ற அட்வைஸ் உடன், தீபாவளிக்கு லக் அடித்துள்ளதாக SM-ல் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

8 ஆண்டுகளில் மிகக் குறைந்த பணவீக்கம்

image

செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், தேசிய அளவில் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைந்துள்ளதாக (தமிழ்நாட்டில் 2.77%) தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இதுதான் குறைவாகும். காய்கறிகள், பருப்புகள், பழங்கள், எண்ணெய், முட்டை, ஏன் எரிபொருள்களின் விலைகள் கூட குறைந்துள்ளதாகவும், இதனால் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News October 14, 2025

BREAKING: விஜய் முக்கிய முடிவு

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பிறகு, விரிவாக செய்தியாளர் சந்திப்பு நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேட்டியளித்த தவெகவின் நிர்மல் குமார், பலியானவர்களின் குடும்பத்தினரை ஓரிரு நாளில் விஜய் சந்திக்க இருப்பதாக குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பில் விஜய்யின் தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்குவது தொடர்பாக தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 14, 2025

வேலை நேரத்தில் தூக்கம் வருதா? சமாளிக்க ட்ரிக்ஸ்

image

வீட்டில் இருக்கும்போது பகல் நேரத்தில் தூக்கம் வருவது கவலை இல்லை. ஆனால் ஆபீசில் இருக்கும் போது தூக்கம் வந்தால் என்ன செய்வது? இதனால் வேலை பாதிக்கும், டெட் லைனில் முடிக்க முடியாமல் போகும், மற்றவர்கள் குறை சொல்லத் தூண்டும், நமக்கே டென்ஷன் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை சமாளிக்க என்ன செய்வது? மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். சூப்பர் ஐடியாக்கள் உள்ளன. நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!