News September 28, 2024

ஓலா திட்டம்: ஒரே நாளில் ‘ஹைப்பர் சர்வீஸ்’

image

சர்வீஸ் குறைபாடு தொடர்பாக எழுந்த பிரச்னைகளை சரிசெய்ய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ‘ஹைப்பர் சர்வீஸ்’ என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை ஒரே நாளில் விரைவாகவும், முறையாகவும் வழங்குவதற்கான தனது சொந்த சேவை வலையமைப்பை விரிவாக்கவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1,000 புதிய மையங்களை திறப்பதுடன், ஒரு லட்சம் மெக்கானிக்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கவுள்ளது.

Similar News

News October 27, 2025

அரசு வங்கிகளில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க திட்டம்?

image

SBI, IOB உள்ளிட்ட 12 பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பை 20%-ல் இருந்து 49%-ஆக உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகமும், RBI-யும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம், மூலதனம் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் அரசுக்கு நிகராக தனியார் பங்குகள் வைத்திருக்கலாமா? கமெண்ட் பண்ணுங்க.

News October 27, 2025

இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

image

கடல் உணவுகளில் மிகவும் சுவையான இறால் பலருக்கும் பிடித்த ஒன்று. இறால் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான நன்மைகளை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், வேறு ஏதேனும் நன்மைகள், உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

News October 27, 2025

BREAKING: ₹20 லட்சத்தை விஜய்க்கே திருப்பி அனுப்பினார்

image

கரூர் துயரத்தில் உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி சங்கவி, விஜய் அனுப்பிய ₹20 லட்சத்தை அவருக்கே திருப்பி அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டவரை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் கூறிய நிலையில், சங்கவியை அழைத்துச் செல்லவில்லை எனத் தெரிகிறது. எனவே, தனக்கு பணம் வேண்டாம், விஜய் ஆறுதல் தெரிவித்தால் போதும் என அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

error: Content is protected !!