News September 14, 2024
எண்ணெய் வடிந்த முகம் பளபளப்பாக

சிலரது முகம் எப்போதுமே எண்ணெய் வடிந்தது போல காட்சியளிக்கும். இதற்கு தீர்வு இதோ.
*வெள்ளரிக்காயை பிசுபிசுப்பாக அரைத்து இரவு முகத்தில் தடவி காலையில் கழுவவும்.
*தக்காளிச் சாற்றை 15-30 நிமிடம் முகத்தில் ஊற வைத்த பிறகு, தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
*முட்டை வெள்ளைக் கருவை மட்டும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யலாம்.
*கற்றாழையை வாரம் இருமுறை அரைத்து தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
Similar News
News November 21, 2025
2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.
News November 21, 2025
BREAKING: விலை ₹7,000 குறைந்தது

வெள்ளி விலை 2 நாள்களில் கிலோவுக்கு ₹7,000 குறைந்துள்ளது. நேற்று(நவ.20) ₹3,000 குறைந்த நிலையில், இன்று ₹4,000 குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் 1 கிராம் ₹169-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,69,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை வரும் நாள்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், முதலீடு நோக்கத்தில் வாங்குவோர் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
News November 21, 2025
இறந்த பின்பும் சார்லஸை பழிவாங்கும் டயானா

பாரிஸில் உள்ள கிரெவின் அருங்காட்சியத்தில், பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் மெழுகுச்சிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனின் தற்போதைய அரசரும், EX கணவருமான சார்லஸ், திருமணத்தை மீறிய உறவை ஒப்புக்கொண்ட அன்று, அவரை பழிவாங்க கருப்பு நிற ஆடையை டயானா அணிந்தார். அதே உடையில் தற்போது மெழுகுச்சிலை திறக்கப்பட்டுள்ளது. 1997-ல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


