News February 27, 2025
அட பாவத்த.. மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைச்சு..

சண்டை போடும் மனைவியை சமாதானப்படுத்த ₹27 லட்சத்தில் Porsche காரை ரஷ்ய கணவர் ஒருவர் வாங்கியுள்ளார். காதலர் தினத்தில் சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என நினைத்த போது, கார் சிறிய விபத்துக்குள்ளானது. ஆர்வமிகுதியில் அப்படியே மனைவிக்கு காரை கொடுத்துள்ளார். டேமேஜான கார் வேண்டாம் என மனைவி கூறவே, காரை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். அவர் எப்படி குப்பைத் தொட்டி மேல் நிறுத்தினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
Similar News
News February 27, 2025
சீமானுடன் இப்படி ஒரு தொடர்பா?

சீமான் வீட்டுக் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ் யார் தெரியுமா? 1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டபோது, அவருடன் இறந்த 16 பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அவரது மகன்தான் இந்த பிரவீன் ராஜேஷ். ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என்று சீமான் பேசியிருந்த நிலையில், அவரது வழக்கில் இப்படி ஒரு வித்தியாசமான கனெக்ஷன் உள்ளது.
News February 27, 2025
PAK-BAN போட்டி கைவிடப்பட்டது

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. குரூப் A பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும், ஏற்கெனவே தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
News February 27, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர், மனைவி மரணம்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜென் ஹேக்மேன், மனைவி பெட்ஸி ஆரகவா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோவில் உள்ள வீட்டில் 2 பேரும் சடலமாக கிடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பேர் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரெஞ்ச் கனெக்சன், நைட் மூவ்ஸ், சூப்பர் மேன் உள்ளிட்ட படங்களில் ஹேக்மேன் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக 2 ஆஸ்கர், 3 கோல்டன் குளோப் விருதுகளை பெற்றுள்ளார்.