News November 29, 2024
கடவுளே அஜித்தே..டீசர் ரெக்கார்ட்ஸ் கவனிச்சீங்களா!

எப்போ வரும், வருமா? வராதா? என சசந்தேகத்திற்கு விடை கொடுத்து, விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வருகிறது. படத்தின் டீசர் சத்தமே இல்லாமல் வெளியாகியுள்ளது. நடுராத்திரி வந்த டீசர், தொடர்ந்து சமூகவலை தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இந்த டீசர் தற்போது வரை 40 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. உங்களுக்கு விடாமுயற்சி டீசர் எப்படி இருந்துச்சு. கமெண்ட்ஸ்ல சொல்லுங்க…
Similar News
News December 10, 2025
தேனி: மாணவர்களுக்கு கல்வி கடன்; மிஸ் பண்ணிடாதீங்க.!

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் (Education Loan Camp) வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (டிச.10) நடைபெற உள்ளது. எனவே, உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 10, 2025
BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 10, 2025
வீடுகளின் விலை கணிசமாக உயரும்

இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 6% உயரும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும். நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை – செப்டம்பரில் 9% குறைந்துள்ளது. மேலும், RBI, இதற்கு மேல் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


