News October 26, 2025
அட்ரா சக்க.. இதுதான் ஜெயிலர் 2 கதையா?

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் ஜெயிலர் 2-வின் கதை Synopsis ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. வர்மனை கொன்ற பிறகு, மேலும் சிலை கடத்தலில் ஈடுபடுபவர்களை தேடி தேடி முத்துவேல் பாண்டியன் எப்படி வேட்டையாடுகிறார் என்பதே ஜெயிலர் 2 என்கின்றனர். முதல் பார்ட்டை விடவும் இதில் Violence அதிகமாக இருந்த போதிலும், ரஜினி ‘அதுக்கெல்லாம் கவலைப்பட வேணாம், படம் நல்லா வந்தா போதும்’ என கூறிவிட்டாராம்.
Similar News
News October 26, 2025
உணவு ஆர்டர் பண்றீங்களா? அப்ப இதை கவனிங்க

உணவு ஆர்டர் செய்யும்போது, அவை கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் டெலிவரி ஆகும். இந்த டப்பாவை கழுவி, மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் பலருக்கும் உள்ளது. இது மிக ஆபத்தானது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். இந்த பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ள BPA, phthalates உள்ளிட்ட நச்சு ரசாயனங்கள் இதய- ரத்த நாள நோய்கள், நீரிழிவு, மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளதாம்.
News October 26, 2025
வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது.. தமிழக அரசு

டெல்டா மாவட்டங்களில் கனமழை & லாரிகள் பற்றாக்குறையால் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள 121 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாகியுள்ளது. நாகையில் மட்டும் இதுவரை நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ₹183.19 கோடி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், தஞ்சையிலும் கொள்முதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News October 26, 2025
வேற மாறி.. வேற மாறி.. Global Star-ஐ இயக்கும் நெல்சன்

ஜெயிலர் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு, தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராகிவிட்ட நெல்சன், ஜெயிலர் 2-வில் பிஸியாக உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர், ரஜினி- கமல் படத்தை இயக்குவார் எனக் கூறப்படும் நிலையில், மற்றொரு செய்தியும் கோலிவுட்டில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. நடிகர் ராம் சரணுடன் நெல்சன் இணையவுள்ளார் என்றும், இந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பார் எனவும் கூறப்படுகிறது.


