News October 1, 2025
OG vs GBU? இயக்குநர் விளக்கம்

தெலுங்கில் மாஸ் காட்டி வரும் ‘OG’ படத்தை அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அதன் இயக்குநர் சுஜித், தான் இப்படத்தின் டீசரை வெளியிட்டபோது, ஆதிக் ரவிச்சந்திரன் ‘GBU’-வின் எழுத்து பணியை கூட தொடங்கவில்லை என தெரிவித்துள்ளார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் முதலே ஆதிக்கை தனக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 1, 2025
TET தேர்ச்சி கட்டாயம்: தமிழக அரசு சீராய்வு மனு

அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் TET தேர்வு கட்டாயம் என சமீபத்தில் SC உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் SC-யில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மாநில அரசு ஆசிரியர் பக்கமே நிற்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
News October 1, 2025
தி.மலை வன்கொடுமை: கனிமொழி கண்டனம்

திருவண்ணாமலையில் இரு போலீஸார் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட SP விசாரணை மேற்கொண்டு வருவதாக தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸாரே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
News October 1, 2025
ஏஞ்சலாய் வந்த சான்வி மேகனா லேட்டஸ்ட் கிளிக்ஸ்

காதல் தூதராக வந்திறங்கியவள் இவள், கண்மையின் அடர்த்தியால் ரசிகர்களின் மனதை ஆட்கொண்டிருக்கும் இவளது விழிகளை பார்த்துக் கொண்டே இருக்கலாம், அப்படி ஒரு தேவதையாக உள்ளார் சான்வி மேகனா. ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இவரின் உதட்டோர புன்னகையால் சிலிர்க்க வைக்கிறார். தரையில் மலர்ந்த வெண்மலரான சான்வியின் லேட்டஸ்ட் போட்டோஸை swipe செய்து பாருங்க. பிடிச்சிருந்தா லைக் போடுங்க.