News August 5, 2024
அமைச்சரவை மாற்றத்திற்கு தயாரான அதிகாரிகள்?

தலைமைச் செயலகத்தின் குறிப்பிட்ட சில துறைகளுக்கான செயலாளர்களை மாற்றுவது குறித்து சமீபத்தில் ஆலோசனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாள்களில் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப சில துறைகளில் அதிகாரிகளை நியமிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு பின் செயலாளர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்கிறது கோட்டை வட்டாரம்.
Similar News
News March 22, 2026
10 மாதம் தொடர்ந்து பறக்கும் பறவை

Common Swift என்ற பறவை தரையிறங்காமல் தொடர்ந்து 10 மாதங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும் இந்தப் பறவைகள், இடையில் எங்கும் நிற்பதில்லை. 40 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த பறவையின் இறக்கைகள் அதிக ஆற்றலைச் செலவழிக்காமல் நீண்ட நேரம் காற்றில் மிதக்க உதவுகின்றன. இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தரையிறங்குகின்றன.
News March 22, 2026
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம்

இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவ தளமான டியாகோ கார்சியா மீதான ஈரான் தாக்குதலை பிரிட்டன் கண்டித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, தங்களின் டியாகோ கார்சியா தளத்தை அமெரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து சுமார் 4000 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டன் தளத்தை ஈரான் தாக்கியுள்ளது.
News March 22, 2026
தாக்குதல்களை நிறுத்துங்கள்.. ஈரானுக்கு 22 நாடுகள் கடிதம்

ஹார்முஸ் நீரிணையை உடனடியாகத் திறக்கக் கோரி 22 நாடுகள் ஈரானுக்கு கடிதம் எழுதியுள்ளன. இந்தப் பட்டியலில் UAE, இங்கிலாந்து, பஹ்ரைன், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் அடங்கும். வளைகுடாப் பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். ஈரானின் நடவடிக்கை உலக மக்களை பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.


