News January 12, 2026

OFFICIAL: ‘பராசக்தி’ வசூல் இவ்வளவு கோடியா..!

image

‘ஜன நாயகன்’ வெளியாகாததால் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான SK-வின் ’பராசக்தி’ 2 நாளில் ₹51 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்த நிலையிலும், முதல் நாளில் ₹27+ கோடி, 2-வது நாளில் ₹24+ கோடி வசூல் செய்துள்ளது. பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், இப்படம் ₹100 கோடியை கடக்கும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

Similar News

News January 22, 2026

ராசி பலன்கள் (22.01.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News January 21, 2026

ராமதாஸ் பெறாத பிள்ளை திருமா: பாமக MLA அருள்

image

திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்கலாம் என பாமக MLA அருள் சூசகமாக கூறியுள்ளார். ராமதாஸ் மீது எந்த வழக்கும் இல்லை, யாருடைய மிரட்டலுக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை எனக் கூறிய அவர், தைலாபுரம் இல்லத்தில் விரைவில் கூட்டணிக்கான கையெழுத்து போடப்படும் என்றார். ராமதாஸ் பெறாத பிள்ளைதான் திருமாவளவன்; அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் தான் டிடிவி, NDA கூட்டணியில் இணைந்தது எனவும் தெரிவித்தார்.

News January 21, 2026

அதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்த 5 கட்சிகள்

image

NDA-வில் ஐஜேகே தொடருவதாகவும், தனிச் சின்னத்தில் போட்டியிட இருப்பதாகவும் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். அதேபோல், வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் பாலை பட்டாபிராமன், அகில இந்திய முக்குலத்தோர் பாசறை கட்சி நிறுவனர் சிற்றரசு, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் முருகன்ஜீ, தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் EPS-ஐ சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

error: Content is protected !!