News May 18, 2024
₹5 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

இன்றைய நாளில் ₹5ஐ வைத்து மிட்டாய் வாங்குவதே கடினம். ஆனால், இந்த ₹5 ஒருவரின் வேலையையே பறித்துள்ளது. குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள கிராம அலுவலகத்தில் நவீன் சந்திரா என்ற கம்பியூட்டர் ஆபரேட்டர் ₹5 லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். நில ஆவணங்களை வழங்க ஒவ்வொரு பக்கத்திற்கும் ₹5 பெற வேண்டும் என்ற நிலையில் இவர் ₹10 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Similar News
News August 20, 2025
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்

கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைகோ அறிவித்துள்ளார். 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்கவும் கெடு விதித்துள்ளார். துரை வைகோ – சத்யா இடையே முரண்பாடு எழுந்தபோது, சத்யாவை ‘துரோகி’ என வைகோ குறிப்பிட்டார். இதற்கு எதிராக அவர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
News August 20, 2025
பொது அறிவு வினா- விடை

1. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
2. இஸ்ரோ எப்போது நிறுவப்பட்டது?
3. தமிழகத்தில் வெற்றிலைக்கு புகழ் பெயர் ஊர்?
4. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்?
5. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க.. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியிடப்படும்.
News August 20, 2025
தவெக மாநாடு: விஜய் ரசிகர் மரணம்

தவெகவின் 2-வது மாநாடு நாளை மதுரையில் நடக்கவிருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் பல இடங்களிலும் பேனர் வைத்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த இனாம் கரிசல்குளம் என்ற கிராமத்தில் பேனர் வைக்க முயன்ற காளீஸ்வரன்(19) இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இவர், தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.