News March 16, 2024
சலுகைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.
Similar News
News August 18, 2025
திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை: வேல்முருகன்

திமுக கூட்டணி தலைவர்கள் யாரும் ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என தவாக தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியை உடைப்பதற்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தான் சட்டப்பேரவையில் கோபமாக பேசினாலும், திமுக அமைச்சர்கள் அதற்குரிய பதிலை அளித்தனர் என்றார்.
News August 18, 2025
பிரபல நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப் காலமானார்!

60 ஆண்டுகளாக ஹாலிவுட் படங்களில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டெரன்ஸ் ஸ்டாம்ப்(87) காலமானார். இவர் உலக புகழ் பெற்ற சூப்பர்மேன்(1978) & சூப்பர்மேன் 2(1980) படங்களில் General Zod கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். சில ஆண்டுகள் முன்பு, டெரன்ஸ் இந்தியாவிற்கு வந்து யோகா பயிற்சி பெற்றார். அவரின் மறைவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
News August 18, 2025
மாநாட்டுக்கு பள்ளி மாணவர்கள் வர வேண்டாம்: விஜய்

தவெக மாநாட்டுக்கு 2 நாள்களே இருக்கும் நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்க வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே மாநாட்டை நேரலையில் காணுங்கள். அதேபோல், தவெக தொண்டர்கள் மாநாட்டுக்கு வரும்போதும், திரும்பும்போதும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.