News April 6, 2025

ஜியோ பயனர்களுக்கு சலுகை நீட்டிப்பு

image

IPL-லின் போது JIO தனது ப்ரீபெய்டு பயனர்களுக்கு JioHotstar-ஐ இலவசமாக வழங்குகிறது. முன்னர் பல ரீசார்ஜ்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை, ஏப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நீங்கள் ₹100/₹195/₹949 ரீசார்ஜ் செய்தால், சுமார் 90 நாள்களுக்கு இந்த செயலியை இலவசமாகப் பார்க்கலாம். ₹100க்கு ரீசார்ஜ் செய்தால் 5GB Data, ₹195க்கு 15GB Data, ₹949க்கு 84 நாட்களுக்கு 2GB Data& அழைப்புகளை பெறலாம்.

Similar News

News December 19, 2025

தவெக பால்வாடி கட்சி: அமைச்சர் சேகர்பாபு

image

ஈரோட்டில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் வழக்கம் போல் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். பால்வாடி கட்சிக்கு பவளவிழா கட்சி பதில் சொல்வது நன்றாக இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் ஊருக்கு ஊர் சென்று கூட்டம் நடத்தும் கட்சி தவெக என்றும், ஆனால் ஊர் முழுவதும் கூட்டம் நடத்தும் கட்சி திமுக எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 19, 2025

வாக்காளர் பட்டியலில் உங்க பெயரை சரிபார்ப்பது எப்படி?

image

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை ECI வெளியிட உள்ளது. இதில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை நீங்கள் ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். ECI இணையதளமான <>https://voters.eci.gov.in/<<>> சென்று அதில் ‘Search in Electoral Roll’ என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ‘Search by EPIC’ காணப்படும் அதில் உங்கள் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் உங்கள் முழு விவரம் வந்துவிடும்.

News December 19, 2025

பாஜகவின் பி டீம் விஜய்யா? நயினார் நாகேந்திரன்

image

விஜய் பாஜகவின் ‘பி டீம்’ என்ற விமர்சனத்திற்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். விஜய் பாஜகவின் பி டீம் என்ற வதந்தியை திமுக திட்டமிட்டு பரப்புவதாக அவர் குற்றம்சாட்டினார். விஜய் கட்சியில் இணையும் முன், செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார் என தெரிவித்த அவர், அதனால் விஜய் திமுகவின் ‘பி டீமா’ அல்லது பாஜகவின் ‘பி டீமா’ என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!