News October 25, 2024
வறுமையைப் போக்கும் ஓதனவனேஸ்வரர்

திருவையாறு சப்தஸ்தானத்தில் அன்னத் தலமான திருச்சோற்றுத்துறை ஓதனவனேஸ்வரர் கோயில் அப்பரால் பாடப் பெற்ற தலமாகும். கௌதம மகரிஷிக்காக வயலில் நெல்லுக்கு பதிலாக அரிசியை விளைவித்து அருள் புரிந்த இந்த திருத்தலத்திற்கு விஜயாலய சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள ஓதனவனேஸ்வரர் – அன்னபூரணியை விரதமிருந்து அபிஷேகம் செய்து, விளக்கேற்றி வணங்கினால் வறுமை தீர்ந்து, செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
Similar News
News December 10, 2025
ராசி பலன்கள் (10.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 10, 2025
234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் காங்கிரஸ்

2026 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் அக்கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதற்கான கட்டணமில்லா படிவத்தை நாளை முதல் டிச.15-ம் தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்த படிவத்தை டிச.15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News December 10, 2025
TN அரசுடன் ₹4,000 கோடிக்கு ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

தமிழக அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ₹4,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழக அரசுடன் இணைந்து திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும். இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இளம் படைப்பாளிகளுக்கு தேவையான ஊக்கத்தையும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


