News October 8, 2025
அக்டோபர் 8: வரலாற்றில் இன்று

*1922 – அறிவியலாளர் கோ. நா. இராமச்சந்திரன் பிறந்தநாள். *1932 – இந்திய விமானப்படை நிறுவப்பட்டது. *1935 – தடகள வீரர் மில்கா சிங் பிறந்தநாள். *1944 – நடிகை ராஜ்ஸ்ரீ பிறந்தநாள். *1987 – விடுதலைப் புலிகள் தாக்குதலில் இந்திய அமைதிப்படையின் 8 வீரர்கள் உயிரிழந்தனர். *2005 – 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் பாக்., இந்தியா, ஆப்கானில்., சுமார் 86,000 பேர் உயிரிழப்பு. *2020 – ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த நாள்.
Similar News
News October 8, 2025
இது நடந்தால் தங்கம் விலை குறையும்

நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல்கள், குறிப்பாக டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் முடிவுக்கு வர வேண்டும்; மத்திய வங்கிகள் வட்டி குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்; புவிசார் மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்; உலக நாடுகள் தங்கம் இருப்பு வைப்பதை குறைக்க வேண்டும்; பத்திரங்களின் வட்டி விகிதம் உயர வேண்டும்; பணவீக்கம் குறையவேண்டும்; இவை நடந்தால் தங்கம் விலை குறையும் என நிபுணர்கள் சொல்றாங்க. SHARE.
News October 8, 2025
கால் பாதவலி நீக்க உதவும் யோகாசனம்!

✦உட்காட்சனம் செய்வதால், கால்கள் வலுபெற்று, பாத வலி நீங்கும் என கூறப்படுகிறது ✦முதலில் விரிப்பில் நேராக கால்களை இடையில் கொஞ்சம் இடைவெளிவிட்டு நிற்கவும் ✦முதுகை வளைக்காமல் கால்களில் அழுத்தம் கொடுத்து, வளைந்து (படத்தில் உள்ளது போல) நிற்கவும் ✦இதே நிலையில், இரு கைகளையும் மேலே நீட்டி நிற்கவும் ✦இந்த நிலையில், 15- 20 நிமிடங்கள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.
News October 8, 2025
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியல்.. SC புதிய உத்தரவு

பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 3.66 லட்சம் விவரங்களை நாளைக்குள் அளிக்க EC-க்கு SC உத்தரவிட்டுள்ளது. இறுதி பட்டியலில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக குறிப்பிட்ட SC, அவை நீக்கப்பட்ட பெயர்களின் சேர்க்கையா அல்லது புதிய பெயர்களின் சேர்க்கையா என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இவ்வழக்கில் இருட்டில் இருந்தபடி முடிவெடுக்க முடியாது எனவும் SC தெரிவித்துள்ளது.