News October 6, 2025
அக்டோபர் 6: வரலாற்றில் இன்று

*1940 – தென் இந்திய நடிகை சுகுமாரி பிறந்தநாள். *1962 – மெட்ராஸ் மாகாண முதல்வர் ப. சுப்பராயன் மறைந்த நாள். *1982 – நடிகர் சிபிராஜ் பிறந்தநாள். *2008 – இலங்கையின், அனுராதபுரத்தில் தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் அந்நாட்டு ராணுவத் தளபதி ஜானக பெரேரா உள்பட 27 பேர் கொலை. *2010 – இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்ட நாள். *2023 – கடல் சார் ஆய்வாளர் ஒடிசா பாலு மறைந்த நாள்.
Similar News
News October 6, 2025
கடந்த ஒரு மாதத்தில்..

இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை 88 ரன்களை வீழ்த்தி ODI WC-ல் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தானை 4 முறை இந்திய அணி வென்றுள்ளது. ஆசிய கோப்பையில் செப். 14 (7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி) செப். 21 (6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி), செப். 28 (5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி) என இந்திய ஆண்கள் அணி 3 வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 6, 2025
தொப்பை குறைய உதவும் பாலாசனம்!

✦முதுகு, கழுத்து, வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும் ✦2 கால்களையும் மடக்கி, கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணையும் படி அமருங்கள் ➥மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, நெற்றி தரையில் படும் படி குனியுங்கள் ➥15- 20 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள். SHARE IT.
News October 6, 2025
Cinema Roundup: பாலிவுட் செல்கிறார் ‘அமரன்’ இயக்குநர்

*’அமரன்’ ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக இந்தியில் விக்கி கெளஷலை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல். *ஜீவாவின் அடுத்த படத்தில் ‘NEEK’ ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். *கண்ணா ரவியின் ‘வேடுவன்’ வெப் தொடர் ஜீ5 ஓடிடியில் அக்.10 முதல் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *பவன் கல்யாணின் ‘OG’ படத்தின் ப்ரீக்வெல், சீக்வெல் வெளியாகும் என இயக்குநர் சுஜீத் அறிவிப்பு.