News October 5, 2025
அக்டோபர் 5: வரலாற்றில் இன்று

*சர்வதேச ஆசிரியர் தினம்.
*சர்வதேச பாலியல் தொழிலுக்கு எதிரான தினம்.
*1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கி படையெடுப்பு நடத்தப்பட்டது.
*1799 – வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு சிறையில் அடைக்கப்பட்டார்.
*1823 – இராமலிங்க அடிகளார் பிறந்தநாள்.
*2011 – Apple நிறுவனத்தை தொடங்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவு நாள்.
Similar News
News October 5, 2025
விஜய்யின் தவெக உடன் கூட்டணியா? விளக்கம்

நீண்ட காலமாகவே விஜய்யுடன் ராகுல் காந்திக்கு பழக்கம் உள்ளதாக KS அழகிரி கூறியுள்ளார். கரூர் துயர சம்பவத்தையடுத்து, விஜய்யுடன் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாக ராகுல் பேசினார். இதனால் தவெகவுடன் காங்., கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அழகிரி, பேசியதற்காக எல்லாம் கூட்டணி அமைக்கும் என கூற முடியாது என்றார். திமுகவுடனான கூட்டணி உடையாது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
News October 5, 2025
ஆயுள் வளர்க்கும் ஆழ்ந்த சுவாசம்!

உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளில் ஒன்று ஆழ்ந்த மூச்சுவிடுதல். ஆழ்ந்த மூச்சுவிடும் போது ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது, படபடப்பு குறைகிறது. மேலும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் குறைவதுடன், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவும் அதிகரிக்கிறது. அதே போல, இது நுரையீரலுக்கு பயிற்சியாக அமைவதுடன், உடல், மன ஆற்றல்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. SHARE.
News October 5, 2025
கனமழை வெளுத்து வாங்கும்

நடப்பாண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என கணித்துள்ளது. இந்நிலையில், அரபிக் கடலில் உருவான ’சக்தி’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், இன்று தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது.