News October 4, 2025
அக்டோபர் 4: வரலாற்றில் இன்று

*உலக விலங்கு தினம்.
*உலக விண்வெளி வாரம் (அக்.4 – 10) தொடங்கியது.
*1824 – மெக்ஸிகோ குடியரசு நாடானது.
*1830 – ‘பெல்ஜியம்’ நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரிந்து தனிநாடாகியது.
*1884 – சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த நாள்.
*1904 – திருப்பூர் குமரன் பிறந்தநாள்.
Similar News
News April 9, 2026
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவில் ஊறவைத்து, காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி அருந்தவும். இப்படி தினசரி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் கட்டுப்படும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News April 9, 2026
புள்ளி, கமாவுக்காக வேட்புமனு நிராகரிப்பு: வேல்முருகன்

தவாக சார்பாக போட்டியிடும் 20 பேரின் வேட்புமனுக்கள், வேண்டுமென்றே நிராகரிக்கப்பட்டதாக வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ECI-யிடம் அவர் புகாரளித்துள்ளார். குறிப்பாக, புள்ளி வைக்கவில்லை, கமா போடவில்லை என்று கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல என தெரிவித்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை 20 தொகுதிகளிலும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News April 9, 2026
தூக்கத்தில்கூட ஸ்டாலின் புலம்புகிறார்: அன்புமணி

வார்த்தைக்கு வார்த்தை பாஜக எனக் கூறி ஸ்டாலின் ஏன் அக்கட்சிக்கு இவ்வளவு பயப்படுகிறார் என்று அன்புமணி கேட்டுள்ளார். ராணிப்பேட்டை பிரசாரத்தில் பேசிய அவர், தூக்கத்தில் கூட பாஜக பாஜக என புலம்பும் ஸ்டாலின், யாராவது தும்மினால் கூட அதற்கும் பாஜகவே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணியில் பாஜக உள்ளதால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை EPS பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.


