News October 31, 2025

அக்டோபர் 31: வரலாற்றில் இன்று

image

Halloween
*1875 – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்.
*1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
*1931 – தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது.
*1984 – இந்திரா காந்தி நினைவுநாள்.

Similar News

News October 31, 2025

BREAKING: தங்கம் விலை.. மகிழ்ச்சி செய்தி

image

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,949-லிருந்து $4,018.9-ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களுக்கு பிறகு விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ₹11,300-க்கும், சவரன் 90,400-க்கும் விற்பனையாகிறது.

News October 31, 2025

அன்புமணி மீது பாய்கிறதா வழக்கு?

image

நேபாளத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற GEN Z தலைமுறையினர் செய்த புரட்சியை போல, தமிழகத்திலும் இளைஞர்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். முன்னதாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து நேபாளத்தில் நடந்த புரட்சி தமிழகத்திலும் நடக்கவேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தார். இதற்காக, வன்முறையை தூண்டுகிறார் என அவர் மீது வழக்கு பாய்ந்தது. இந்நிலையில், அன்புமணி மீதும் வழக்கு பாயுமா?

News October 31, 2025

திமுகவில் இணைந்தனர்…

image

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

error: Content is protected !!