News October 18, 2025
அக்டோபர் 18: வரலாற்றில் இன்று

*1922 – பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது. *1929 – கனடாவில் பெண்களும் மனிதர்கள் என சட்டபூர்வமாக எழுதப்பட்டது. *1931 – விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் இறந்தநாள். *1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது. *2004 – சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார். *1978 – நடிகை ஜோதிகா பிறந்தநாள்.
Similar News
News October 18, 2025
சாதி கொலைகளில் அலட்சியம் காட்டுகிறதா திமுக அரசு?

வன்கொடுமை தடுப்பு சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த CM ஸ்டாலின் தலைமையில் குழு உள்ளது. இக்குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும். ஆனால் 4 ஆண்டுகளில் வெறும் 3 முறையே கூடியிருக்கிறது என அண்ணாமலை பதிவிட்டிருக்கிறார். மேலும், இக்குழுவின் தலைவரான CM இதுபற்றி பேச மறுப்பது ஏன் எனவும் கேட்டுள்ளார். இதுதவிர, ஆட்சியர் தலைமையில் குழு, ADGP தலைமையில் குழு என பல குழுக்கள் செயலற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News October 18, 2025
BREAKING: வீடு வீடாக தீபாவளி பரிசு… செந்தில் பாலாஜி

சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், தனது தொகுதி மக்களை கவரும் வகையில் சிறப்பு தீபாவளி பரிசுகளை செந்தில் பாலாஜி கொடுத்து வருகிறார். இந்நிலையில், கரூர் தொகுதியில் உள்ள சுமார் 88 ஆயிரம் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக இனிப்பு, காரத்துடன் சில்வர் அண்டா பரிசுகளை செந்தில் பாலாஜி வழங்கி வருகிறார். தனது ஆதரவாளர்களை ஒவ்வொரு வீடாக சென்று பரிசுகளை வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
News October 18, 2025
GALLERY: கிரிக்கெட் வீரர்களின் முதல் இன்ஸ்டா பதிவு!

கிரிக்கெட் பிரபலங்களின் தற்போதைய போஸ்ட்கள் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகின்றன. ஆனால், இவர்களின் முதல் இன்ஸ்டா போஸ்ட்டை பலரும் பெரிதாக பார்த்திருக்கவே மாட்டோம். அப்படி MS தோனி முதல் KL ராகுல் வரை கிரிக்கெட் ஸ்டார்களின் முதல் இன்ஸ்டா போஸ்ட் மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்படுத்தியது எந்த போட்டோ என கமெண்ட் பண்ணுங்க?