News October 16, 2025
அக்டோபர் 16: வரலாற்றில் இன்று

*உலக உணவு நாள். *1799 – பாளையக்காரர் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். *1905 – ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வங்காளத்தை 2-ஆக பிரித்தனர். *1919 – ஹிட்லர் முதல்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். *1948 – நடிகை ஹேம மாலினி பிறந்தநாள். *1949 – நடிகரும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் பிறந்தநாள். *1963 – கடற்புலிகளின் தலைவர் சூசை பிறந்தநாள். *1990 – அனிருத் பிறந்தநாள்.
Similar News
News October 16, 2025
KKR அணியின் கேப்டனாகிறாரா KL ராகுல்?

2024-ல் சாம்பியன் பட்டம் வென்ற KKR, 2025 சீசனில் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், 2026-ல் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ள KKR, கேப்டனாக KL ராகுலை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025 சீசனில் 539 ரன்களை குவித்து அசத்திய KL ராகுல், ஓப்பனராகவும், விக்கெட் கீப்பராகவும் இருப்பார் என்பதால், அவரை அணியில் சேர்க்க, டெல்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
News October 16, 2025
கரூர் துயரம் ஒருநாள் முன்னரே தெரிந்தது: L முருகன்

கரூர் துயரில் பாஜக அரசியல் செய்யவில்லை, ஆனால் திமுக நாடகமாடுகிறது என்று L முருகன் விமர்சித்துள்ளார். விஜய்யின் கரூர் பரப்புரை நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னரே, கூட்டத்தில் ஏதோ நடக்கப் போகிறது என்ற பேச்சு மக்கள் மத்தியில் இருந்ததாக அவர் புயலை கிளப்பியுள்ளார். மேலும், திமுகவை பொறுத்தமட்டில் மக்களின் உயிருடன் விளையாடும் அரசியலை செய்து வருவதாகவும் காட்டமாக சாடினார்.
News October 16, 2025
வில்லனாக நடிக்க SK போடும் கண்டிஷன்

லாபத்திற்காக இல்லாமல், ஆத்ம சந்தோஷத்திற்காக படம் தயாரிப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ‘அமரன்’ படத்தை விட ‘மதராஸி’ தான் தன்னை ஆக்ஷனில் மெருகேற்றியதாகவும், பிடித்த கதையாக இருந்தால் வில்லனாக நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ஷூட்டிங் செல்லும் பகுதிகளில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதாகவும், மற்றபடி அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.