News October 13, 2025
அக்டோபர் 13: வரலாற்றில் இன்று

*பன்னாட்டு இயற்கை பேரிடர் குறைப்பு நாள். *1792 – வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. *1884 – சர்வதேச நேரம் கணிக்கும் இடமாக லண்டனில் உள்ள கிரீன்விச் தெரிவு செய்யப்பட்டது. *1923 – துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் இலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது. *1956- தமிழ்நாடு என பெயர் வைக்க போராடி உயிர்நீத்த சங்கரலிங்கனார் இறந்த நாள். *1990 – தென்னிந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள்.
Similar News
News October 13, 2025
விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் தடாலடி

தவெக கூட்டணிக்கு வந்தால், பாஜகவை அதிமுக கழற்றிவிடுமா, விஜய்யுடன் பேசினீர்களா என EPS-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அதிமுக – தவெக கூட்டணி குறித்து தேர்தலுக்கு முன்பு தெரியவரும் என EPS பதிலளித்தார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய்யுடன் பேசவில்லை என்றும், ராமதாஸ் உடன் என்ன பேசினேன் என்பதை வெளியே சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
1 லட்சம் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே

நாடு முழுவதும் 1.04 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 33 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவில் 12,912 ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. இது ஒரு பள்ளிக்கு 34 மாணவர்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. துவக்கப்பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும், மேல்நிலை பள்ளிகளில் 35 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது விதி.
News October 13, 2025
கரூர் துயரம்: SIT குழுவில் கூடுதலாக SP சேர்ப்பு

கரூர் துயரம் தொடர்பாக, IG அஸ்ரா கார்க் தலைமையிலான SIT விசாரித்து வருகிறது. இந்த குழுவில் 2 SP, 1 கூடுதல் SP, 2 DSP, இன்ஸ்பெக்டர்ஸ், கான்ஸ்டபிள்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தும் நோக்கில் திருவாரூர் SP கரண் கரட், SIT குழுவில் கூடுதல் அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார். CBI விசாரணை கோரிய தவெக மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.