News October 12, 2025
அக்டோபர் 12: வரலாற்றில் இன்று

*1911–கிரிக்கெட் வீரர் விஜய் மெர்ச்சன்ட் பிறந்தநாள். *1918–தொழிலதிபர் கே.கே பிர்லா பிறந்தநாள். *1976–மும்பையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற விமானம் வெடித்து சிதறியதில் 95 பேர் உயிரிழப்பு. *1976– நடிகை ராணி சந்திரா மறைந்த நாள். *1981– நடிகை சினேகா பிறந்தநாள். *1991–நடிகை அக்ஷரா ஹாசன் பிறந்தநாள். *1993–இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
Similar News
News October 12, 2025
6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்!

TN-ல் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்கின்றன. அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஹாஸ்பிடல்கள் உள்பட பல்வேறு இடங்களில் இந்த முகாம்கள் காலை 9.15 மணிக்கு தொடங்குகின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட மறந்துவிடாதீர்கள். SHARE IT.
News October 12, 2025
BreakFast-க்கு கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடுறீங்களா?

டயட் என்ற பெயரில் காலையில் கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிடுறீங்களா? இதனால் உங்கள் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகின்றன. காலை உணவு சத்தாக இருப்பது அவசியம். ஆனால் கார்ன் ஃப்ளேக்ஸில் கலோரியும், சத்துகளும் மிக குறைவு. இன்னும் சொல்லப்போனால் இதை சாப்பிடுவதால் Type 2 Diabetes, Fatty Liver வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம். எனவே, இதற்கு பதிலாக ஓட்ஸ், ராகி மால்ட், அரிசி கஞ்சி போன்றவற்றை சாப்பிடுங்கள். SHARE.
News October 12, 2025
கேன்சருடன் போராடும் USA Ex அதிபர் ஜோ பைடன்!

USA Ex அதிபர் ஜோ பைடன்(82) சிறுநீர் பையில் ஏற்பட்டுள்ள கேன்சருக்காக கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார். மேலும், அதுமட்டுமில்லாமல், ஹார்மோன் சிகிச்சையும் பெற்று வருவதாக பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கேன்சர் பாதிப்பு காரணமாகவே கமலா ஹாரிஸுக்கு வழிவிட்டு அதிபர் போட்டியில் இருந்து விலகியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மீண்டு வாருங்கள் ஜோ பைடன்!