News October 11, 2025

அக்டோபர் 11: வரலாற்றில் இன்று

image

*1811–முதலாவது நீராவிப் படகுக் கப்பல் சேவை நியூயார்க், ஹோபோகன் இடையே தொடக்கம். *1826 – எழுத்தாளர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தநாள். *1902–அரசியல்வாதி ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாள். *1942–நடிகர் அமிதாப் பச்சன் பிறந்தநாள். *1984–நடிகர் நிவின் பாலி பிறந்தநாள். *1987-விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப் படை ஆபரேஷன் பவான் நடவடிக்கையை தொடங்கியது.

Similar News

News October 11, 2025

வாழ்வில் வெற்றி பெற இன்றே இந்த பழக்கங்களை விடுங்க!

image

✦காலம் பொன் போன்றது என்பார்கள். இப்போது விட்டு, பிறகு வருத்தப்பட வேண்டாம் ✦சோம்பல் தான் உங்கள் வாழ்வின் மிக பெரிய எதிரி ✦கடினமாக இருக்கிறது என பயப்பட்டு விலக வேண்டாம். சிரமங்களே உங்களை செதுக்கும் ✦கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அவற்றையும் கைவிடுங்கள் ✦பயந்து பயந்து ஒரு காரியத்தை இழந்து விட வேண்டாம் ✦தீய பழக்கங்களை கைவிடுங்கள். அது கவனச்சிதறலை தான் உண்டாக்கும். SHARE IT.

News October 11, 2025

குறும்பு வாத்தியாரின் கலக்கல் கிளிக்ஸ்

image

‘வா வாத்தியார்’ படம் வரும் டிச.5-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தின் ஸ்பெஷல் போட்டோக்களை படக்குழு பகிர்ந்துள்ளது. பாடல், எமோஷனல் என முக்கிய காட்சிகளில் எடுக்கப்பட்ட அந்த போட்டோக்கள், படத்தின் Mode-ஐ வெளிப்படுத்துவதாக உள்ளது. கார்த்தியின் ஸ்பெஷல் போஸ்டரோ, புரமோவோ இல்லாமல் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, இந்த போட்டோக்கள் சற்று ஆறுதலை தந்துள்ளன.

News October 11, 2025

தீபாவளி விடுமுறை.. சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

image

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்.21, 22-ல் நெல்லையில் காலை 4 மணிக்கு புறப்படும் ரயில்(06156) பிற்பகல் 1.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு ரயில்(06155) புறப்பட்டு இரவு 11.55 மணிக்கு நெல்லை சென்றடையும். மேலும், <>சென்னை சென்ட்ரல்-மங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கும்<<>> ரயில்கள் இயக்கப்படுகின்றன.

error: Content is protected !!