News October 9, 2024
அக்.9: வரலாற்றில் இன்று

1941 – பனாமாவில் நடைபெற்ற ராணுவப் புரட்சிக்கு பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத் தலைவரானார்.
1967 – பொலிவியாவில் அக்.8 கைது செய்யப்பட்ட சே.குவேரா இன்று(அக்.9) புரட்சியைத் தூண்டியதாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
1981 – பிரான்ஸில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
2004 – ஆப்கானித்தானில் முதல்முறையாக பொதுத் தேர்தல் நடைபெற்றது.
Similar News
News August 7, 2025
8 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

வட தமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதேபோல், கோவையின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
News August 7, 2025
‘கிங்டம்’ படத்திற்கு போலீஸ் பாதுகாப்பு?

தமிழகத்தில் ‘கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கில் காவல்துறை, நாதக பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்படத்தில் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதாக சர்ச்சை எழுந்ததால் நாதக போராட்டத்தை அறிவித்தது. இதையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டை அணுகியது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உண்டு என கூறி, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேருக்கு வேலை: CM

கடந்த 4 ஆண்டுகளில் அரசு, தனியார்கள் மூலமாக 6,41,664 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களுடன் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ₹10.63 லட்சம் கோடிகள் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் அரசின் 2வது ஆட்சியிலும் இன்னும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.