News October 23, 2024
அக்.23: வரலாற்றில் இன்று

1923: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் பிறந்தார்
1940: பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே பிறந்தார்
1968: காமெடி நடிகர் வையாபுரி பிறந்தார்
1979: தெலுங்கு நடிகர் பிரபாஸ் பிறந்தார்
1982: நடிகர் ஜித்தன் ரமேஷ் பிறந்தார்
1991: நடிகை சாந்தினி செளத்ரி பிறந்தார்
2023: முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பெடி காலமானார்
Similar News
News December 20, 2025
பொங்கலுக்குள் கூட்டணியை இறுதி செய்ய NDA தீவிரம்

தஞ்சை (அ) மதுரையில் நடைபெறவுள்ள பாஜகவின் பொங்கல் விழாவில் NDA கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் வெளிப்பாடே பாஜக – அதிமுக முக்கிய தலைவர்கள் மாறி மாறி டெல்லி மேலிடத்தை சந்தித்து வருகின்றனர். NDA-வில் தற்போது அதிமுக, பாஜக, தமாகா, புதிய நீதிக்கட்சி, ஐஜேகே உள்ளன. மேலும், பாமக, தேமுதிக, அமமுக, OPS அணியை விரைவாக கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.
News December 20, 2025
அஜித் ரசிகர்களுக்கு நியூ இயரில் ட்ரீட்

ரேஸிங்கில் அஜித் பிஸியாக உள்ள நிலையில் அவரது படங்களுக்கு ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். சமீபத்தில் ரீ-ரிலீஸான அட்டகாசம் படம் அவரது ரசிகர்களுக்கு சின்ன கொண்டாட்டத்தை கொடுத்தது. அதைவிட மாஸாக கொண்டாடும் வகையில் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. ஜன.23-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
News December 20, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கத்தின் விலையில் இன்று மிகப்பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இன்று(டிச.20) 1 அவுன்ஸ்(28g) தங்கம் விலை $7.95 அதிகரித்து $4,340 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $1.85 உயர்ந்து $67.14-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை(தற்போது ₹99,040) இன்று கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.


