News June 18, 2024
ஆங்கிலப் பள்ளிகள் மீதான மோகம் தற்கொலைக்கு சமம்

ஆங்கிலப் பள்ளிகள் மீதான பெற்றோர்களின் மோகம், தற்கொலைக்கு சமம் என தேசிய ஆராய்ச்சி கல்வி மற்றும் கவுன்சிலின் தலைவர் டி.பி.சக்லானி கூறியுள்ளார். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் பள்ளிகளில் பயிற்சி இல்லாத ஆசிரியர்கள் பணிபுரிவதாகவும், ஆங்கிலப் பள்ளிகள் மீதான மோகத்தால் பெற்றோர்கள் அங்குச் சென்று தங்களது பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2026
கேஸ் சிலிண்டர்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும் மக்களிடம் பதற்றம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், எரிபொருள் விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை 20% – 50% வரை உயர்ந்தாலும், இந்தியாவில் விலை உயர்வு இருக்காது என்றும் உறுதியளித்துள்ளார்.
News March 29, 2026
மாமனார், மாமியாருக்கு மருமகள் ஜீவனாம்சம் தரணுமா?

கணவன் மறைவுக்கு பின்பும் மாமனார், மாமியாரை கவனித்து கொள்ளும் மருமகள்கள் உண்டு. ஆனால் அது சட்டப்பூர்வ கடமையா, கணவனின் பெற்றோருக்கு மருமகள் கட்டாயம் ஜீவனாம்சம் அளிப்பது குறித்து குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், மகனை இழந்த முதிய தம்பதி, மருமகளிடம் ஜீவனாம்சம் கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். தார்மீக கடமையை சட்டப்பூர்வ கடமையாக செயல்படுத்த முடியாது என்று ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்தது.
News March 29, 2026
ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணசாமி போட்டி!

புதிய தமிழகம் கட்சி 70 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் என கிருஷ்ணசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேபோன்று நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 2 தொகுதிகளிலும் தனது மகன் ஷியாம் கிருஷ்ணசாமியை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>


