News July 25, 2024
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்பூரில் பல பிஞ்சு உயிர்களை காப்பாற்றி உயிர்விட்ட வேன் ஓட்டுநர் மலையப்பன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் பள்ளி வேனை ஓட்டிவந்த மலையப்பன், நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ஸ்டீயரிங்கில் மயங்கி விழுந்து உயிர்விட்டார். அவரது மனிதநேயமிக்க செயலால் புகழுருவில் அவர் வாழ்வார் என்றும் முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 26, 2026
ஈரோடு: இனி Whatsapp-ல் பிறப்பு, இறப்பு சான்றிதழ்!

ஈரோடு மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News March 26, 2026
EPS-ன் Makeup முகத்துக்கு பின்னால் அமித்ஷா: சிவசங்கர்

திமுகவை விமர்சிக்கும் தகுதி EPS-க்கு இல்லை என SS சிவசங்கர் கூறியுள்ளார். திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக இருப்பதாக <<19478396>>EPS<<>> பேசியதை குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது; அதனால்தான் பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது என தெரிவித்தார். மேலும், EPS மேக் அப் போட்டு அறிவிப்புகளை வெளியிட்டாலும் அதற்கு பின்னால் இருப்பது அமித்ஷா என்றும் விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
இந்திய கப்பல்களுக்கு தடை இல்லை: ஈரான் அமைச்சர்

இந்தியாவுக்காக ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து திறந்தே இருக்கும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதியளித்துள்ளார். ஈரானுடன் நட்பு நாடாக இருக்கும் இந்தியா, சீனா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான கப்பல்கள் தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவுக்கான எரிபொருள் தட்டுப்பாடு பிரச்னை நீங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 5 கப்பல்கள் இந்தியா நோக்கி வருகின்றன.


