News May 15, 2024
‘ஓ’ கொஞ்சம் ஸ்பெஷலானது!

சமத்துவத்தை வெளிப்படுத்த ‘எல்லோரது உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான்’ என்று சொல்வார்கள். ஆனால், அது உண்மையல்ல. மனிதனின் (A, B, AB, O) ரத்தப் பிரிவுகளில் ‘ஓ’ மிகவும் ஸ்பெஷலானது. இப்பிரிவு ரத்தம் சிறிதும் ஆபத்தில்லாதது. எனவே மிக அவசரமான சூழலில், ரத்தம் தேவைப்படும் யார் உடலிலும் இந்த ரத்தத்தை உட்செலுத்த முடியும். உலக மக்களில் பாதிப்பேர் ‘ஓ’ ரத்தத்தைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 1, 2025
இனி இந்த பொருள்களின் விலை உயரும்!

இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இதில், வரி சீர்திருத்தம் தொடர்பான 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் மற்றும் பான் மசாலா மீதான வரி உயர்த்தப்படலாம். இதனால் இப்பொருள்கள் விலையேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர காஃபின் கலந்த குளிர்பானங்கள், தனி விமானங்களுக்கான வரியும் உயர்த்தப்பட உள்ளதாம்.
News December 1, 2025
மானுட அதிசயமே மீனாட்சி!

சிங்கப்பூர் சலூன், GOAT, லக்கி பாஸ்கர் படங்களில் கவனம் ஈர்த்த மீனாட்சி செளத்ரி ஒரு தீவிர போட்டோஷூட் பிரியர். வாரம்தோறும் புது புதிதாக போட்டோக்கள் எடுத்து, அதை SM-ல் பகிர்ந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பார். அதேபோல இந்தவாரமும் மஞ்சள் காட்டு மைனாவாக மஞ்சள் உடையில் மினு மினுக்கிறார். புகைப்படங்களை பார்க்க மேலே Swipe செய்யவும்.
News December 1, 2025
சாக்லேட் ஐஸ்கிரீம் வித் சாதம்: என்ன கொடுமை சார் இது!

உணவு பரிசோதனை என்ற பெயரில், வினோதமான கலவைகளை உருவாக்குவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்விக்கி போட்ட ஒரு வினோத உணவின் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ஆவி பறக்கும் சாதத்துடன், சாக்லேட் ஐஸ்கிரீமை கலந்து, அதை ‘best dessert’ என்று ஸ்விக்கி பதிவிட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் திட்டி வரும் நிலையில், சிலர் இதை ட்ரை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். நீங்க ட்ரை பண்ணுவீங்களா?


