News December 24, 2025

NZ tour of IND: நியூசிலாந்து அணிகள் அறிவிப்பு

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசி., அணி 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இதற்கான அணியை நியூசி., அறிவித்துள்ளது. ODI போட்டிகளை பிரேஸ்வெல் தலைமையிலும், T20-ஐ சாண்ட்னர் கேப்டன்சியிலும் விளையாடவுள்ளது. இரு அணியிலும் கேன் வில்லியம்சன் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. சூர்யகுமார் தலைமையில் T20 போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Similar News

News December 24, 2025

பொங்கல் பண்டிகை.. தமிழக அரசு அறிவிப்பு

image

தமிழகமெங்கும் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு களைகட்டும். வரும் 2026-ல் பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டை நடத்துவது தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

News December 24, 2025

தேனீயின் விஷம், இனி புற்றுநோய்க்கு மருந்து!

image

உலகம் முழுவதும் பெண்களை அதிகம் பாதிக்கும் <<18629533>>மார்பக புற்றுநோய்க்கு<<>>, தேனீக்களின் விஷம் அருமருந்தாக உள்ளதாக ஆஸி., விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த விஷத்தில் உள்ள ‘மெலிட்டின்’ என்ற வேதிப்பொருள், நல்ல செல்களை பாதிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும், குறுகிய காலத்தில் அழிக்கிறது. சிகிச்சையளிக்க முடியாததாக கருதப்படும் புற்றுநோய் செல்களையும் அழிப்பதால், இது மருத்துவ உலகின் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.

News December 24, 2025

லோன் வட்டி விகிதத்தை குறைத்தது Union Bank

image

ரெப்போ வட்டி விகிதத்தை RBI, 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இந்நிலையில், Union Bank of India முக்கிய லோன்களின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதன்படி, வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 30 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.15% வட்டியில் லோன் கிடைக்கும். வாகனக் கடன் 40 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 7.50% வட்டியுடனும், தனிநபர் கடன் 160 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு 8.75%-லும் கிடைக்கும்.

error: Content is protected !!