News June 19, 2024
மைக்ரோசாஃப்ட்டை விஞ்சியது NVIDIA

கணினி & மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்களை தயாரிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான NVIDIA உலகின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை எட்டியுள்ளது. NVIDIA இன் சந்தை மூலதனம் $3.327 டிரில்லியனாக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் & ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் 2 &3ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
Similar News
News November 14, 2025
BREAKING: திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை DCM உதயநிதி தொடங்கி வைத்துள்ளார். காரைக்குடியில் முதல்கட்டமாக 1,448 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை அவர் வழங்கினார். அனைத்து பள்ளிகளிலும் ₹248 கோடி மதிப்பில் 5,34,017 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட உள்ளது. தற்போது, வார விடுமுறை என்பதால் வரும் திங்கள்கிழமை முதல் சைக்கிள் விநியோகம் செய்யும் பணி தொடங்கும்.
News November 14, 2025
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.
News November 14, 2025
பிஹார் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: நயினார்

பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றிக்கு ECI உதவியதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அமைதியாக இருக்கும் காங்., தோல்வியடைந்தால் மட்டும் ECI-யை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.


