News September 20, 2025
சத்தான காலை உணவுகள்

காலை உணவு, நாள் முழுவதும் அதிகப்படியாக சாப்பிடுவதைத் தடுத்து, சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவும். காலை உணவைத் தவிர்ப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படலாம். மேலே, சில சத்தான காலை உணவுகள் போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. நீங்கள் காலை என்ன சாப்பிடுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 20, 2025
பாலியல் தொல்லை தராங்களா? இந்த நம்பருக்கு அடிங்க

பாலியல் & வன்முறையால் பாதிக்கபட்ட பெண் குழந்தைகள், பெண்களை பாதுகாக்க அரசின் ‘சகி ஒன் ஸ்டாப் சென்டர் திட்டம்’ இருக்கிறது. இதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, தங்குமிடம், சட்ட ஆலோசனை, காவல்துறை உதவி ஆகியவை கிடைக்கும். இதற்கு, ‘181’-க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தால் போதும், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இத SHARE பண்ணுங்க.
News September 20, 2025
பிரபல பாடகர் காலமானார்… குவியும் இரங்கல்

பிரபல பாலிவுட் பாடகரும் அசாமின் இசை ஐகானுமான ஜுபின் கார்க்(52) நேற்று விபத்தில் <<17761763>>மரணமடைந்தார்<<>>. இவரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிப்பதாக தன் இரங்கல் செய்தியில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். இணையற்ற திறமையாளரின் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தியும், அசாம் தனக்கு பிடித்தமான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது என்று அம்மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மாவும் தம் இரங்கல்களில் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
மசூதி மீது ட்ரோன் தாக்குதல்: 75 பேர் துடிதுடித்து பலி!

சூடானில் மசூதி மீது RSF(துணை ராணுவம்) நடத்திய ட்ரோன் தாக்குதலில், 75 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மே 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும், Rapid Support Forces (RSF) அமைப்பிற்கும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. நாட்டின் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை பதவி நீக்கிய பிறகு, அதிகார பகிர்வு தோல்வியடைந்ததால், இரு அமைப்புக்கும் இடையே போர் வெடித்துள்ளது.