News June 27, 2024
நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்

ஏற்றுமதியில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருவதாக பெருமிதம் தெரிவித்த அவர், அதில் முதன்மையானது தொழில் துறை என்றும் கூறினார். அத்துடன், உலகம் முழுவதும் இருந்து பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு தொழில் தொடங்க வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் வெற்றி

பிஹார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சில சுற்றுகளில் பாஜக வேட்பாளர் சதீஷ்குமாரை விட பின்தங்கி இருந்தார். எனினும், அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் தேஜஸ்வி வென்றுள்ளார். அதேநேரம் அவரது MGB கூட்டணி 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது.
News November 14, 2025
மோடி அரசுக்கு கிடைத்த வெற்றி: அமித்ஷா

வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவது கட்டாயம் என்பதை பிஹார் மக்கள் நிரூபித்துள்ளனர் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் பிஹாரில் கிடைத்த ஒவ்வொரு வாக்கும் மோடி அரசின் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் ஊடுருவல்காரர்கள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
News November 14, 2025
SIR பணிகளில் குளறுபடி செய்யும் திமுக: EPS

தமிழக அரசின் தலையீட்டால் SIR பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக EPS குற்றம்சாட்டியுள்ளார். ECI விழிப்போடு இருந்து அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். போலி வாக்காளர்களை நீக்க SIR முறையாக நடக்க வேண்டும் என்றும், வேண்டுமென்றே அதில் குளறுபடி செய்ய திமுக முயல்வதாகவும் சாடியுள்ளார்.


