News April 8, 2025
நம்பர்-1 துரோகி இபிஎஸ் : ரகுபதி விமர்சனம்

தமிழ்நாட்டின் நம்பர்-1 துரோகி யார் எனக் கேட்டால் அரசியல் தெரியாத 6ஆம் வகுப்பு மாணவன் கூட இபிஎஸ்-ஐ கை காட்டுவான் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்வார், எந்தத் துரோகத்தையும் செய்வார் என்பதற்கு நடமாடும் சாட்சிதான் ஓபிஎஸ் என சாடிய அவர், இபிஎஸ் சுயரூபம் தெரியாமல் அவரை நம்பி மோசம் போன இவர்கள் தான் அந்த தியாகிகள் என்று பதிலடியும் கொடுத்துள்ளார்.
Similar News
News December 18, 2025
பால் கலப்படத்தை தடுக்க புதிய கொள்கை

பால் கொள்முதல் மற்றும் விற்பனையை சீர்படுத்தவும், பால் கலப்படத்தை தடுக்கவும் புதிய கொள்கை வகுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்த கொள்கை மூலம் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அதாவது, உற்பத்தியாளர்களே நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு விற்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 18, 2025
BREAKING: அண்ணாமலை கைது

திருப்பூரில் நடைபெற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.
News December 18, 2025
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்: CM ஸ்டாலின்

தனது வெற்றிக்கு பின்னால் தன்னுடைய மனைவிதான் (துர்கா ஸ்டாலின்) இருக்கிறார் என்று CM ஸ்டாலின் கூறியுள்ளார். தான் மிசாவில் கைதாகி சிறையில் இருந்தபோது, மன தைரியத்துடன் அனைத்தையும் எதிர்கொண்டவர் தன் மனைவி என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பெண்கள் முன்னேறினால் தான் குடும்பமும் முன்னேறும், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என்று அறிவுறுத்தினார்.


